உணர்ச்சி அலைகளை குறைத்திடு
அறிவும் அமைதியும் பெறுவாய்
ஆசைகளை சீரமைத்திடு
தன்னம்பிக்கை பெறுவாய்
சினத்தை தவிர்த்திடு
நிம்மதி பெறுவாய்
ஈகையை பெருக்கிடு
புன்னியம் பெறுவாய்
முறையற்ற காமத்தை வென்றிடு
முறையான வாழ்வை பெறுவாய்
ஒப்பிட்டு பார்ப்பதை தவிர்த்திடு
இனிய மனமும் இன்முகமும் பெறுவாய்
வஞ்சத்தை தவிர்த்திடு
மனம் உயர்வதை காண்பாய்
இறைவனை உன்னுள்ளே கண்டிடு
பேரானந்தம் பெருவாய்